பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்டு வரும் தார்ச்சாலை பணிகளின் மூலமாக மற்ற மாவட்டங்களில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்;தை கடந்து செல்லும் வாகனங்களுக்கு மட்டுமல்லாமல் கிராமப்பகுதிகளில் அமைக்கப்படும் சாலைகளின் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கான கால நேரம் குறைந்து வருகின்றது.
அதன்படி பெரம்பலூர் மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) மூலம் 2011-12 ஆம் ஆண்டில் 28 பணிகள் 51.95கி.மீ. நீளத்திற்கு ரூ.19.68 கோடி மதிப்பீட்டில் சாலைகள் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. 2012-13 ஆம் ஆண்டு 27 பணிகள் 52.51 கி.மீ. நீளத்திற்கு ரூ.34.87 கோடி மதிப்பீட்டிலும், 2 பாலப்பணிகள் 61.77 இலட்சம் மதிப்பீட்டிலும் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
2013-14 ஆம் ஆண்டில் 38 பணிகள் 83.35 கி.மீ. நீளத்தில் ரூ.34.54 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தி மேம்பாடு செய்யப்பட்டது. மேலும், பெரம்பலூர் நகருக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணியானது 9.075 கி.மீ. நீளத்திற்கு ரூ.28.65 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு சாலைகள் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. மாநில உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் திட்டம் 2013-14 ன்கீழ் 3 பணிகள் 23.00 கி.மீ நீளத்தில் ரூ. 25.14 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. 2014-15ஆம் நிதியாண்டில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ், 42 சாலைப்பணிகள் 68.38 கி.மீ நீளத்திற்கு ரூ. 66.58 கோடி மதிப்பீட்டிலும், 2 சிறு பாலப்பணிகள் ரூ. 54.00 இலட்சத்திற்கும் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடப்பாண்டில் (2015-16) புதுவேட்டக்குடி-லப்பைக்குடிகாடு சாலையில் 8.50 கி.மீ. நீளத்திற்கு ரூ. 14.10 கோடி மதிப்பீட்டிலும், குன்னம்-வேப்பூர்-வயலப்பாடி சாலையில் 9.60 கி.மீ. நீளத்திற்கு ரூ. 16.48 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் கிருஷ்ணாபுரம்-வெண்பாவூர்-பெரியவடகரை-கைகளத்தூர்-பில்லாங்குளம்-கூகையூர் சாலையை மாவட்ட முக்கிய சாலையாக தரம் உயர்த்த 9.60 கி.மீ. நீளத்திற்கு, ரூ. 13.00 கோடி மதிப்பீட்டிலும், ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ஆகமொத்தம் ரூ. 70.00 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாட்டுப்பணிகள் பெரம்பலுhர; மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது பெரம்பலுhரில் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.125.11 லட்சத்திற்கு அமைக்கப்பட்டு வரும் செங்குணம் – முருக்கன்குடி – மங்கலமேடு சாலையினையும், வேப்பு+ரில் 2 கிலோ மீட்டர; நீளத்திற்கு ரூ. 73.05 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் அந்தூர் – வரகூர் சாலையினையும், பெரம்பலூர்- மானாமதுரை சாலையிலிருந்து பிரிந்து ஒதியம் செல்லும் வகையில் 2.6 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.93.84 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாலையினையும் மாவட்ட ஆட்சியர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது குறிப்பிட்ட காலத்திற்குள் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென்றும், மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்காத வகையில் சலையின் அமைப்பு இருக்க வேண்டுமென்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.