பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மலையாளப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது சின்ன முட்லு, இங்கு மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் மலையாளப்பட்டிக்கு வரும் அரசு பேருந்தை முக்கால் கி.மீ தூரத்தில் உள்ள சின்ன முட்லு வரை பேருந்து வசதி வேண்டி கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்திலையில் அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று மலையாளப் பட்டி வரை சென்று வந்த அரசு பேருந்தினை சின்ன முட்லு வரை நீட்டிப்பு செய்து அப்பகுதி மக்களுக்கு பேருந்து வசதியை பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் தமிழ் செல்வன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழாவில் அரசு போக்கவரத்து கழக அதிகாரிகள் உட்பட பொது மக்கள், அதிமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொணடனர்.