இன்று பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளதாவது :
பெரம்பலூரில்உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம், சாரதாநகர், சபில்குடா பகுதியை சார்ந்த விஷால் (20) என்பவர் பி.இ. கம்யூட்டர் சயின்ஸ் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
இவர், கடந்த ஜுலை 24ம் தேதி மாலை சுமார் 06.00 மணியளவில், வங்கி ஏ.டி.எம்மில் ரூ. 20 ஆயிரத்தை எடுத்து கொண்டு கடைவீதி வழியாக தோமினிக் பள்ளி அருகே தனியாக நடந்து வந்துள்ளார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நான்கு நபர்கள், அவரை வழிமறித்து அவரிடம் இருந்த ரூ. 20ஆயிரத்தை பிடுங்கி கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இது விஷால் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தியதில் பெரம்பலூர் ஆலம்பாடி சமத்துவபுரத்தை சேர்ந்த சதாம் உசேன் (18), பெரம்பலூர் சங்குப்பேட்டையை சேர்ந்த ரங்கசாமி மகன் ராஜா (29), அதே பகுதியை சேர்ந்த துரைசாமி மகன் சதீஷ்(24), கலியமூர்த்தி மகன் செங்கோட்டுவேல் (24) ஆகிய நான்கு பேரும் வழிப்பறி செய்த குற்றச்செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
நால்வரும் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்ட தொகை பறிமுதல் செய்யப்பட்டது, பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டட அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் சதீஷ், செங்குட்டுவேல் ஆகிய இருவரும் பல்வேறு குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவர்கள் இருவர் மீதும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவழக்கை எடுக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் திருச்சி மத்திய சிறையில் உள்ள மேற்படி குற்றவாளிகளிடம் இன்று 10.08.15-ந் தேதி குண்டர் தடுப்பு சட்ட ஆணை நகல் சார்பு செய்யப்பட்டது.
மேற்படி வழக்கில் சிறப்பாக பணியாற்றியமைக்காக பெரம்பலூர் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்திரா பாராட்டினார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.