பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று இரவு பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கியது முதல், வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
மாலை 6.30 முதல் 7.30 மணி வரை பரவலான மழை பெரம்பலூர் நான்கு ரோடு. துறைமங்கலம் பகுதிகளில் அதிகமாகவும், பெரம்பலூர் நகர் பகுதிகளில் பரவலான மழையும் பெய்தது. மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்தது.
இந்த மழை தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்ததால், நகரின் பிரதான சாலைகளில் மழை நீர் ஓடியது. இதேபோல, மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ததால், வெப்பம் தணிந்து லேசான குளிர் காற்று வீசி துவங்கியதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.