பெரம்பலூர் மாவட்டததில், ஐ ஓ பி மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் ஆயுள்காப்பீட்டு கழகம் இணைந்து நடத்தும் பிரதம மந்திரியின் காப்பீட்டு திட்ட முகாமை நாளை ஆட்சியர் துவங்கி வைக்கிறார்..
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியான மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் எல்.ஐ.சி ஆப் இந்தியாவுடன் இணைந்து நடத்தும் டவுன் ஹால் கூட்டம் முகாம் நாளை 11.08.2015 காலை 10.30 மணிக்கு பெரம்பலூரில் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா; அருள்தாசன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள எளம்பலூர் சாலையில் ஸ்ரீ கர்ணம் சகுந்தலா கல்யாண மண்டபத்தில் நடைபெற உள்ள பிரதமரின் காப்பீட்டு திட்ட முகாமை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமது துவக்கி வைக்கிறார்.
இந்த முகாமில் அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் தனியார் வங்கிகளும் அங்கம் வகிக்கின்றன. இந்த முகாமிற்கு வருகை தரும் பொதுமக்கள் தங்களுடை வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தை கொண்டு வந்து, தங்களுக்கு உரிய வங்கியில் பிரதம மந்திரியின் பிரதான்மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, பிரதான்மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் பயன் பெறுமாறு கேட்டுகொள்ளபடுகிறது.