பெரம்பலூர் : இன்று பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பாக, பெரம்பலூரில் உள்ள முத்துகிருஷ்ண திருமண மண்டபத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்திரா தலைமையில், பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவது தொடர்பான பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் இருந்து விநாயகர்சிலை ஊர்வலம் நடத்தும் விழா கமிட்டி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கில் விநாயகா; சிலை வைத்தல், ஊர்வலம் மற்றும் கரைத்தல் தொடர்பான அனைத்து விதமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அறிவுரைகள் எடுத்துரைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயபாஸ்கர், மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகர், வருவாய் துறையினர், காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துறை ஆய்வாளர்கள், அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.