பெரம்பலூர், ஜூன் 5: பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை பரவலான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கோடைகாலம் தொடங்கியது முதலே பெரம்பலூர் மாவட்ட மக்கள் கடும் வெயிலால் அவதிப்பட்ட நிலையில், இன்று மாலையில் வெயிலின் தாக்கம் குறைந்ததோடு, வானம் மேகமுட்டத்துடன் காணப்பட்டது. பின்னர், மாலை 6.30 மணியளவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் பரவலான மழை பெய்தது.
சுமார் 1 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால், சாலை ஓரங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், வெப்பம் தனிந்து குளிர் காற்று வீசியதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.