பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம பகுதிகளுக்கு கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் காற்றுடன் மழை இடைவிடாமல் தொடர்ந்து பெய்தது.
அவ்வப்போது அறிவிக்கப்படாமல் மின்தடை ஏற்பட்டது. இந்த மின்தடையானது காலை முதல் இரவு வரை இருந்தது.
இதுகுறித்து மின் நிலைய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: புயல் காற்றால் துணைமின் நிலையத்திலிருந்து மின்விநியோகமாகும் பல்வேறு இடங்களில் மின் வயர்கள் ஒன்றோடு ஒன்று பிண்ணிக்கொண்டது. இடைவிடாமல் மழை பெய்வதால் உடனடியாக சீரமைக்க முடியவில்லை என தெரிவித்தார். . இந்த தொடர் மின் தடையால் தீபாவளி பண்டிகை காலங்களில் பொதுமக்கள், வணிகர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.