பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் காற்றுடன் மழை பெய்து வருகிறது. காற்று வேகமாக வீசியதில் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த தட்டிகள் முறிந்து கீழே விழுந்தன.
தகராத்தால் போடப்பட்டிருந்த மாட்டு கொட்டகைகள் காற்றில் பெயர்ந்து வீழ்ந்தன. இதனால் எவ்வித ஊயிர் சேதமும் ஏற்பட்டதாக இது வரை எந்த வித தகவலும் இல்லை.
இன்று காலை 8 மணி வரை பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்; பெரம்பலூர், செட்டிக்குளம், 1.மி.மீ.க்கும் குறைவான தூறல் மழை. வேப்பந்தட்டை 7.மி.மீ., தழுதாழை 13.மி.மீ., பாடாலூர் 2மி.மீ. அளவு மழை பதிவாகி உள்ளது.