பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
அதிகப்படியான வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடி மையங்கள் வாக்காளர்களின் நலன் கருதி பிரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 1400 க்கும் மேற்ப்பட்ட வாக்காளர்களை கொண்ட நகர்ப்புறங்களை சேர்ந்த வாக்குச்சாவடி மையங்களும், 1200 க்கும் மேற்ப்பட்ட வாக்காளர்களை கொண்ட கிராமப்புற வாக்குச்சாவடி மையங்களும் தற்சமயம் பிரிக்கப்பட உள்ளன.
அதன்படி பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 1202 வாக்காளர்களை கொண்ட வெங்கலம்(42), 1220 வாக்காளர்களை கொண்ட ரஞ்சன்குடி(122), 1422 வாக்காளர;களை கொண்ட பெரம்பலூர்(172), 1211 வாக்காளர்களை கொண்ட அரணாரை(200), 1275 வாக்காளர்களை கொண்ட குரும்பலூர் – பாளையம்(209), 1275 வாக்காளர்களை கொண்ட குரும்பலூர்(211), 1316 வாக்காளர்களை கொண்ட ஈச்சம்பட்டி(216), மற்றும் 1262 வாக்காளர்களை கொண்ட கவுள்பாளையமும்(268) புதிய வாக்குச்சாவடி மையங்களாக பிரிக்க உத்தேக்கப்பட்டுள்ளது.
அதுபோல் 148 குன்னம் சட்டமன்ற தொகுதியில் 1205 வாக்காளர;களை கொண்ட லப்பைகுடிகாடு(6), 1354 வாக்காளர்களை கொண்ட லப்பைகுடிகாடு(9), 1212 வாக்காளர்களை கொண்ட குன்னம்(146), 1222 வாக்காளர்களை கொண்ட அல்லிநகரம்(175), 1204 வாக்காளர்களை கொண்ட ஜமீன்ஆத்தூர(206), மற்றும் 1209 வாக்காளர்களை கொண்ட கழுமங்கலம்(316) ஆகியவை புதிய வாக்குச்சாவடி மையங்களாக பிரிக்க உத்தேக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட வாக்குச்சாடி மையங்கள் பிரிக்கப்பட உள்ளதால், வாக்குசாவடி இடம் மாற்றம் மற்றும் புதிய கட்டிடம் மாற்றுவது தொடர்பாக ஆட்சேபனை தெரிவிப்பவர்கள் 28.12.2015-க்குள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடமோ அல்லது பெரம்பலூர் சார் ஆட்சியரிடமோ தெரிவிக்கலாம், அதில் தெரிவித்துள்ளார்.