இளம்பெண் சாவு;
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்ட இளம்பெண் தூக்கிட்டு ஒருவர் இன்று தற்கொலை செய்துகொண்டார்.
குன்னம் அருகேயுள்ள சின்ன வெண்மணி கிராமம், வடக்கு தெருவை சேர்ந்தவர் கூத்தப்பன் மகள் பானுமதி (21). இவருக்கு கடந்த சில மாதங்களாக வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் பலனளிக்கவில்லையாம். இதனால் மனமுடைந்த பானுமதி அவரது வீட்டில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கூத்தப்பன் அளித்த புகாரின் பேரில், குன்னம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஹோட்டல் தொழிலாளி தூக்கிட்டு சாவு
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உணவகத் தொழிலாளி தூக்கிட்டு இன்று தற்கொலை செய்துகொண்டார்.
குன்னம் அருகேயுள்ள புதுவேட்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் வேல்முருகன் (35). ஹோட்டல் தொழிலாளி. ஏற்கனவே நிகழ்ந்த சாலை விபத்தில் மனநலன் பாதிக்கப்பட்ட வேல்முருகனுக்கு, சென்னை, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லையாம். இதனால் மனமுடைந்த அவர் இன்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பெரியசாமி அளித்த புகாரின் பேரில், குன்னம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.