மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.நந்தகுமார் விடுத்துள்ள தகவல் :

நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என்று அறிவித்ததைத் தொடர்ந்து 147.பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளில் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர;.

வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான காலம் இன்று மதியம் 3 மணியுடன் நிறைவுற்றது. பெரம்பலூர் சட்ட மன்றத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த ப.குருசாமி, சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்த ஜெ.வேல்முருகன் ஆகியோர் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர்.

அதன் அடிப்படையில் 147.பெரம்பலூர் (தனி) சட்ட மன்றத் தொகுதியில் அஇஅதிமுக சார்பில் போட்டியிடும் இரா.தமிழ்ச் செல்வனுக்கு இரட்டை இலை சின்னமும், திமுக சார்பில் போட்டியிடும் ப.சிவகாமிக்கு உதயசூரியன் சின்னமும், தேமுதிக சார்பில் போட்டியிடும் கி.ராஜேந்திரனுக்கு முரசு சின்னமும், பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் மு.கலியபெருமாளுக்கு தாமரை சின்னமும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஆ.குணசேகரனுக்கு கடிகாரம் சின்னமும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் நெ.அருண்குமாருக்கு இரட்டை மெழுகுவர்த்திகள் சின்னமும்,

தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் போட்டியிடும் பெ.குணாளனுக்கு பானை சின்னமும், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் மு.சத்தியசீலனுக்கு மாம்பழம் சின்னமும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் பெ.பாலச்சந்திரனுக்கு தொப்பி சின்னமும், சிவசேனா சார்பில் போட்டியிடும் சி.பிச்சைமுத்துவிற்கு வில் அம்பு சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்த செ.செல்லையாவிற்க்கு தொலைக்காட்சிப்பெட்டி சின்னமும், து.பரமசிவம் அவர்களுக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னமும், ப.பன்னீர்செல்வத்திற்கு மோதிரம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் பெரம்பலூர் சட்ட மன்றத் தொகுதியில் 13 வேட்பாளர்கள் இறுதிசெய்யபட்டு அவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

148.குன்னம் சட்டமன்றத் தொகுதியில் அஇஅதிமுக சார்பில் போட்டியிடும் ஆர்.டி.ராமச்சந்திரனுக்கு இரட்டை இலை சின்னமும், திமுகவின் சார்பில் போட்டியிடும் டி.துரைராஜ்-விற்கு உதய சூரியன் சின்னமும், பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் போட்டியிடும் திரு.கே.ராஜேந்திரனுக்கு யானை சின்னமும்,

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் பி.அருளுக்கு இரட்டை மெழுகுவர்த்திகள் சின்னமும், லோக் ஜனசக்தி கட்சி சார்பில் போட்டியிடும் சீனிவாசனுக்கு பங்களா சின்னமும்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் ஜெ.முகமது ஷானவாசிற்கு மோதிரம் சின்னமும், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஆர்.ரகுபதிக்கு கத்தரிக்கோல் சின்னமும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் ஜி.வைத்திலிங்கத்திற்கு மாம்பழம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சுயேட்சையாக போட்டியிடும் வி.ராஜனிற்கு கேஸ் சிலிண்டர் சின்னமும், என்.சிலம்பரசனுக்கு தேங்காய் சின்னமும், பி.செந்தில்குமார் அவர்களுக்கு எலக்ட்ரிக் போல் சின்னமும் , எம்.செந்தில்குமார் வாளி சின்னமும் , ஆர்.துரைராஜ்-விற்கு பலூன் சின்னமும், எம்.ராமலிங்கத்திற்கு ஆட்டோ ரிக்ஷா சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
குன்னம் சட்டமன்றத்தொகுதியில் மொத்தம் 14 நபர்கள் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

பெரம்பலூர் தொகுதியில் 13 வேட்பளார்களும், குன்னம் தொகுதியில் 14 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர், என தெரிவித்துள்ள

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!