மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவிடும் பொருட்டு பெரம்பலூர் மாவட்ட அனைத்து அரசு ஊழியர் சங்கங்கள், வியாபாரிகள் சங்கங்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் சேகரிக்கப்பட்ட சுமார் 12 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் பெய்து வரும் வரலாறு காணாத வடகிழக்குப் பருவமழையின் காரணமாக சென்னை, கடலூர;, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக சென்னையில் பெய்து வரும் அடை மழையின் காரணமாக சென்னை முழுவதும் வௌ;ளக்காடாக காட்சி அளிக்கின்றது. அங்குள்ள மக்கள் மழை, வெள்ளத்தின் காரணமாக உண்ண உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். தமிழக அரசின் சார்பில் பல்வேறு நிவாரணங்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் அவர்களின் சோகத்தில் பங்கு கொள்ளும் வண்ணம் பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்து அரசு ஊழியர் சங்கங்கள், வியாபாரிகள் சங்கங்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் சேகரிக்கப்பட்ட சுமார் 12 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் சென்னை தாம்பரம் பகுதிக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டன.
பெருமழையால் அடிப்படை வசதிகளின்றி தத்தளிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் அவர;களுக்கு தேவையான அத்தியாவசிப் பொருட்களான குடிநீர், பிஸ்கட் மற்றும் பிரெட் பாக்கெட் உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில் 55,000 பிஸ்கட் பாக்கெட்டுகளும், 1,100 பிரட் பாக்கெட்டுகளும், 2லிட்டர் அளவுகொண்ட 2,000 தண்ணீர் பாட்டில்களும் என சுமார் 12 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேகரிக்க்ப்பட்டு 3 லாரிகள் மூலமாக தாம்பரம் பகுதிகளிலுள்ள பொது மக்களுக்கு வினியோகிக்கும் பொருட்டு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தப்பொருட்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு வாகனங்கனை வழியனுப்பி வைத்தார்.
மேலும் மழையால் பாதிக்ப்பட்டுள்ள சென்னை மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு உதவிட அனைத்து பொதுமக்களும் முன் வர வேண்டும். நிதி உதவி வழங்க விருப்பமுள்ளவர்கள் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களின் நிவாரண உதவிகளை வழங்கலாம்.
தமிழக முதலமைச்சரின் நிவாரண உதவிக்கு நிதி வழங்க விரும்பும் நபர்கள் “CHIEF MINISTER PUBLIC RELIEF FUND – CHENNAI” என்ற முகவரிக்கு வரைவோலை எடுத்து அதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இடம் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அஹமது கேட்டுக்கொண்டுள்ளார்.