பயிற்சி பெற்ற மாணவிக்கு சான்றிதழ், பரிசு அளிக்கிறார் மாவட்ட கல்வி அலுவலர் (பொ) ஜெயராமன். உடன், மாவட்ட கன்வீனர் வி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்.
பெரம்பலூர் மாவட்ட அளவில் செஞ்சிலுவை சங்க தலைவர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாம் குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7, 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
பயிற்சி முகாம் தொடக்க விழாவுக்கு, முதன்மை கல்வி அலுவலர் க. முனுசாமி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் (பொ) ஜெயராமன், தொடக்கக் கல்வி அலுவர் இரா. எலிசபெத், மாவட்ட செஞ்சிலுவை சங்க கௌரவ செயலர் நா. ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) பி. தமையந்தி வாழ்த்துரை வழங்கினர்.
இந்த பயிற்சி முகாமில் பங்கேற்ற 94 உயர்நிலை, மேல்நிலை, நடுநிலைப் பள்ளிகளை சேர்ந்த 704 மாணவ மாணவிகளுக்கு செஞ்சிலுவை சங்க வரலாறு, 7 அடிப்படைக் கொள்கைகள், நட்புறவின் முக்கியத்துவம், தொண்டின் சிறப்பு, மனித நேயம், முதலுதவி, யோகா, உடற்பயிற்சி, சாலை போக்குவரத்து விதிமுறைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நலவாழ்வு, விளையாட்டு போட்டிகள், பேரிடர் மேலாண்மை, கைவினை பொருள்கள் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
நிறைவு விழாவுக்கு தலைமை வகித்து, பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார் மாவட்டக் கல்வி அலுவலர் ஜெயராமன்.
இந்நிகழ்ச்சியில், மருத்துவர் ஆ. தங்கராஜ், குரும்பலூர் பேரூராட்சி தலைவர் என். பாப்பம்மாள், அலுவலக நேர்முக உதவியாளர் அ. மணிவண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட கன்வீனர் வெ. ராதாகிருஷ்ணன் வரவேற்றார். பள்ளி ஆசிரியர் ம. ஜோதிவேல் நன்றி கூறினார்.