பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து அரசுத் துறை, வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்குத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் இரு நாட்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது என ஆட்சியர் தரேஸ் அகமது தெரிவித்துள்ளார்.

ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் 18.08.2015, 19.08.2015 ஆகிய இரண்டு நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை நடைபெறுகிறது. 19.08.2015 பிற்பகல் 03.30 மணி முதல் ஆட்சிமொழிக் கருத்தரங்கம், தமிழ் வளர்ச்சி இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.

மாவட்ட வருவாய் அலுவலரின் பயிலரங்கத் தொடக்க உரையைத் தொடர்ந்து பயிரலங்கில்

ஆட்சிமொழி வரலாறுச் சட்டம், ஆட்சிமொழிச் செயலாக்க அரசாணைகள், மொழிபெயர்ப்பு கலைச் சொல்லாக்கம், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், மொழிப்பயிற்சி, ஆட்சிமொழி ஆய்வும் குறைகளைவு நடவடிக்கைகளும் ஆகிய ஆறு தலைப்புகளில் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் பயிற்சி அளிக்கவுள்ளார்கள்.

அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு அலுவலர்கள், பணியாளர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (பொ) முனைவர். சிவசாமி செயல்படுவார் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!