பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. சோனால் சந்திரா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் (ஆண், பெண் இருபாலரும்) தேர்வு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்வு எதிர்வரும் 08.07.2015 அன்று பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைப்பெறும் எனவும், தேர்வுக்கு வருபவர்கள் காலை 09.00 மணிக்கு விளையாட்டு அரங்கில் ஆஜராகுமாறு தெரிவித்துள்ளர்.
தேர்வர்கள் தகுதி: (கல்வி) பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி, (வயது): 20 முதல் 45 க்குள், இருக்க வேண்டும் என்றும், இரண்டு புகைப்படம், சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல் கொண்டு வர வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.