- நாம் தமிழர் கட்சியினர் நெடுவாசல், கோவில்பாளையம், அரசலூர் அன்னமங்கலம், குரும்பலூர் பகுதியில் காணொளி பரப்புரை நிகழ்த்தினர்.
- குன்னம் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் வழக்கறிஞர் ப.அருள் இன்று குன்னத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் சார்பில் குணசேகரன் என்பவரும்,குன்னம் சட்டமன்றத்தொகுதியில் திமுக சார்பில் த.துரைராஜ் என்பவரும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். - அய்யலூர் சிறுவாச்சூர் பகுதிகளில் அதிமுக சிறப்பு பேச்சாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
- ஆலத்தூர் பாடாலூர் பகுதிகளில் பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி பா.ம.க வேட்பாளர் சத்திய சீலன் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுப்பட்டார்.
- பெரம்பலூர் சட்ட மன்ற திமுக தோழமை கட்சி வேட்பாளர் சமூக சமத்துவப் படை வேட்பாளர் ப.சிவகாமி குரும்பலூர், அம்மாபாளையம், களரம்பட்டி பகுதிகளில் ஆதரவு திரட்டினார்.
- பெரம்பலூர் எடத் தெரு மற்றும் எசனை கிராமத்தில் இன்று சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன.
- நாளை (ஏப்.28 ) காலை முதல் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் வருமான வரி அலுவலகம் திறப்பு செய்யபட்டு இயங்க உள்ளது.