தொடக்கக் கல்வித்துறையில் அரசின் ஆணைக்கிணங்க தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2015-2016 ம் ஆண்டிற்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது என மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசரியர்களுக்கான 2015-16ஆம் ஆண்டிற்கான கலந்தாய்வு 16.08.2015 முதல் 30.8.2015 வரை பெரம்பலூர் ஆர்.சி. பாத்திமா தொடக்கப்பள்ளியில் நடைபெற உள்ளது.
அதனடிப்படையில் 16.08.2015 அன்று நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு ஒன்றித்துக்குள்ளான பொதுமாறுதல்களுக்கான கலந்தாய்வும், நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் களின் பதவி உயர்வுக்கான கலந்தாய்வும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியத்துக்குள்ளான பொது மாறுதலுக்கான கலந்தாய்வும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளது.
17.08.2015 அன்று தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு ஒன்றித்துக்குள்ளான பொது மாறுதல் கலந்தாய்வும், தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வும், இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவலுக்கான கலந்தாய்வும் நடைபெறவுள்ளது.
22.08.2015 அன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றித்துக்குள்ளான பொதுமாறுதல் கலந்தாய்வும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கான(மாவட்டத்திற்குள்) பொதுமாறுதல் கலந்தாய்வும் நடைபெறவுள்ளது.
மாவட்டம் விட்டு மாவட்டம செல்வதற்காக இணையதள வழியான கலந்தாய்வு 29.08.2015 அன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 30.08.2015 அன்று இடைநிலை ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
எனவே, மாறுதலுக்காக விண்ணப்பித்த ஆசிரியப்பெருமக்கள் இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என பெரம்பலூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.