பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கீழ தைக்கால் பள்ளிவாசலில் இஸ்லாமியரின் இப்தார் (ரமலான்) நோன்பு திறப்பு தேமுதிக சார்பில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர்.துரை காமராஜ் கலந்து கொண்டு இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களுடன் நோன்பு கஞ்சி அருந்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சீனி.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் ஆர்.கண்ணுசாமி, ஒன்றிய செயலாளர் துரை.சிவாஐயப்பன், செயற்குழு உறுப்பினர் செல்லப்பிள்ளை,பொதுகுழு உறுப்பினர் ரவிக்குமார்,மாணவர் அணிசெயலாளர் முத்தமிழ்செல்வன், ஒன்றிய பொருளாளர் சதீஷ்,ஒன்றிய துணை செயலாளர் பாலகிருஷ்ணன், ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்படுகளை கீழ தைக்கால் ஷாஜகான்,செல்வகுமார், தேமுதிக கிளை கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.