பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வரும் ஏப். 25 முதல் ரோலர் ஸ்கேட்டிங், டென்னிஸ், இறகு பந்து மற்றும் நீச்சல் உள்ளிட்ட விளையாட்டுகளில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும், இதர விளையாட்டு பயிற்சிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும் நடைபெறும்.
சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் விதத்தில், இப்பயிற்சி முகாம்கள் சிறந்த பயிற்றுநர்கள் மூலம் காலை, மாலை என இரு வேளைகளிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு வகை விளையாட்டு பயிற்சிக்கும் ரூ.750- பயிற்சி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மேலும், விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), 8220113260, 8973438131, 8608580130 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம் என தெரிவித்துள்ளார்.