பெரம்பலூர் மாவட்டம் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் ஆலத்தூர் வேப்பூர் மற்றும் வேப்பந்தட்டை ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமபுற இளைஞர்களுக்கு தொழில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திட்டத்தின் மூலம் பெண் நடத்துநர், அழகு கலை மற்றும் ஓட்டுநர் கனரகம் மற்றும் இலகுரகம் முடித்த 124 இளைஞர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது சான்றிதழ்கள் மற்றும் உபகரணங்களை வழங்கினார்.