பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரண்டு சட்ட மன்ற தொகுதிகளிலும் மொத்தம் 638 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் சட்ட மன்றத் தொகுதிக்கு 33 மண்டல அலுவலர்களும், குன்னம் சட்டமன்றத்தொகுதிக்கு 31 மண்டல அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மண்டல அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவது குறித்து விரிவான, விளக்கமான பயிற்சிகள் அளிக்கப்பட்டு, மண்டல அலுவலர்கள் பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்கும் விதம் குறித்து விளக்கமளித்தனர்.
தற்போது இந்த மண்டல அலுவலர்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் பணியாற்ற நியமிக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் 3 வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 2,552 அலுவலர்களுக்கு தேர்தல் நாளில் வாக்குச்சாவடி நிலையத்தில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பின்பற்றவேண்டிய விதிமுறைகள் குறித்தும் பயிற்சி வகுப்பை எடுக்க உள்ளனர;.
23.4.2016 அன்று குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும், ஏப்.24 அன்று பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்குமான பயிற்சி வகுப்புகள் துறையூர் சாலையிலுள்ள சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
முன்னதாக வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பில் என்னென்ன தகவல்களை சொல்ல வேண்டும், என்னென்ன விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என்பதை விளக்கும் வகையில் மண்டல அலுவர்களுக்கான பயிற்சி வகுப்பு 22.4.2016 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நடைபெறவுள்ளது. என மாவட்ட ஆட்சியத் தலைவர் தெரிவித்துள்ளார்.