இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் 16 தனியார் மொத்த உர விற்பனையாளர்கள், 185 தனியார் சில்லரை உர விற்பனையாளர்கள் மற்றும் 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக மாவட்டத்திற்குத் தேவையான உரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
மாவட்ட நிர்வாகம், வேளாண்மைத் துறை மற்றும் கூட்டுறவுத் துறை இவர்களின் கூட்டு முயற்சியால் நடப்பாண்டில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கிடைத்திட பல்வேறு முனைப்பான நடவடிக்கைள் மேற்கொண்டதன் அடிப்படையில், இதுவரை 10,984 மெட்ரிக் டன் யூரியா, 2,710 மெட்ரிக் டன் டிஏபி, 3,470 மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் 9,319 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதில் 45 சதவீதம் யூரியா, 61 சதவீத டிஏபி, 47 சதவீத பொட்டாஷ் மற்றும் 40 சதவீத காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளன.
மேலும், தற்சமயம் மாவட்டத்தில் 1647 மெட்ரிக் டன் யூரியா, 504 மெட்ரிக் டன் டிஏபி, 837 மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் 1635 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு உள்ளது. எனவே உரங்கள் தேவைப்படும் விவசாயிகள் இதனை முறையாக பெற்று பயன்படுத்தி கொள்ள வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.