பெரம்பலூர்: பெரம்பலூர் ரோட்டரி சங்கம் சார்பில் கடலூர், விழுப்புரம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று நிவாரண உதவிகள் வழங்கினர்.
பெரம்பலூர் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவரும், எசனையை சேர்ந்த தொழிலதிபரும், ரோட்டரி சங்க முன்னாள் தலைவருமான ஜெ.கார்த்திக் தலைமையில், இன்று அச்சங்க நிர்வாகிகள் வள்ளலார் அரவிந்தன், மற்றும் வசுந்தரா பழமுதிர்ச் சோலை உரிமையாளர் ஜெயப்பிரகாஷ், பிரபல வழக்கறிஞர் பாபு, ரோவர், ராமக்கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 கிலோ எடை கொண்ட 5 ஆயிரம் பைகள், 2 ஆயிரம் பாய்கள், 2 ஆயிரம், வேட்டி, துண்டுகள், சேலைகள், பிரட் பாக்கட்டுகள், பிஸ்கட்டுகள், தண்ணீர் பாக்கட்டுகள் உள்ளிட்ட சுமார் 5 லட்சம் மதிப்பலான பொருட்களை விழுப்புரம், கடலூர் மாவட்ட பகுதிகளில் வழங்கினர்.