பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 874 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் முன்னிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா வழங்கினார்.
குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 133 மாணவர்களுக்கும், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 324 மாணவர்களுக்கும், செட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 179 மாணவகளுக்கும், மேலப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 60 மாணவர்களுக்கும், நக்கசேலம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 24 மாணவர்களுக்கும், அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 110 மாணவர்களுக்கும், களரம்பட்டடி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 44 நபர்களுக்கும் என மொத்தம் 874 நபர்களுக்கு ரூ.1 கோடியே, 17 லட்சத்து ,99 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டது. பெரம்பலூர் வட்டத்தில் இதுவரை 13 ஆயிரத்து 313 விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது – நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா தகவல் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, பெரம்பலூர் ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயக்குமார், குரும்பலூர் பேரூராட்சிமன்ற தலைவர் பாப்பம்மாள், கூட்டுறவு சங்கத்தலைவர் செல்வராஜ், மாவட்ட கல்வி அலுவலர் (பொ) ஜெயராமன், பள்ளி தலைமை ஆசிரியர் கஜபதி, உதவிதலைமை ஆசிரியர் தமயந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.