அருந்தானிய உணவகத்தை குத்து விளக்கேற்றி திறந்து வைக்கிறார் சுழலியல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா.
பெரம்பலூர் : பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், அருந்தானிய உணவகம் திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை வட்டாட்சியர் என். சீனிவாசன் தலைமை வகித்தார்.
பாண்டியன் கிராம வங்கி கிளை மேலாளர் பாண்டிக்கண்ணன், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் புவனேஷ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளர் பி. மணிவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரம்பலூர் வட்டாட்சியர் வி. செல்வராஜ், சுழலியல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா ஆகியோர் குத்து விளக்கேற்றி அருந்தானிய உணவகத்தை திறந்து வைத்தனர்.
இங்கு, இயற்கை முறையில் தானியங்களால் தயாரிக்கப்பட்ட தினை லட்டு, கேள்வரகு லட்டு, எள் உருண்டை, கேள் வரகு மிக்ஸர், மூலிகை சூப் வகைகள், ஆவாரம் பூ, துளசி, புதினா உள்ளிட்ட டீ வகைகள் வியாபார நோக்கமின்றி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விற்பனை செய்யப்படுகிறது என்றார் அதன் உரிமையாளர் ரா. மாதேஸ்வரன்.
விழாவில், வேப்பந்தட்டை சமூக பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், மகளிர் திட்ட மேலாளர் ஆம்ப்ரோஸ், உதவி மேலாளர் முரளி, மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் என். ஜெயராமன், மாவட்டச் செயலர் ஆ. துரைசாமி, தமிழ் ஆர்வலர் செந்தமிழ் வேந்தர், மத் ஐடி சொலுசன் ஆனந்த் உள்ளிட்ட பலர் இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.