பெரம்பலூர்: சர்வதேச உலக யோகா தினத்தை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் யோகசன பயிற்சி வகுப்பில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
உலக யோகா தினம் இன்று (21.6.2015) கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இந்த பயிற்சியில் சூரிய வணக்கம், புஜங்காசனம், தனுர்ஆசனம், உத்தகாசனம், சர்வாங்காசனம், உத்தனபதாசனம், கலாசனம், நின்ற பதாசனம், மூச்சுப்பயிற்சி, தியானப்பயிற்சி ஆகிய ஆசனங்கள் செய்யப்பட்டன.
இந்த பயிற்சி வகுப்பில் ஏராளமான கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர்கள், யோகசான பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் , பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் ஈஷா யோகா பயிற்சி நடைபெற்றது.
சிறுவாச்சூரில் உள்ள ராமகிருஷ்ணா கல்வி நிறுவனம் சார்பில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில், கல்லூரி தாளாளர் எம். சிவசுப்ரமணியம், செயலர் எம்.எஸ். விவேகானந்தன், ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே. வரதராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.
பெரம்பலூர் தந்தை ரோவர் தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஏ. சுப்பாராஜ் தலைமையில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல, மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளிகளில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.