பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வேப்பூரில் உள்ள ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் நேற்று காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்ததை தொடர்ந்து வேப்பூரில் உள்ள பள்ளியில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
விழாவில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சந்திரகாசி முன்னிலை வகித்து இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் புது வேட்ட குடி கூட்டுறவு சங்க தலைவரும், ஒன்றிய செயலாளருமான கிருஷ்ணசாமி , ஒன்றியக் குழு தலைவர் கிருஷ்ணகுமார் ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி, ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் குணசேகரன். கீழப்பழுவூர் மாவட்ட ஆசிரியர் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் அருணாசலம், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சிவக்குமார், பழனிச்சாமி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டுறவு சங்க தலைவர்கள் , உள்பட பலர் கலந்து கொண்டனர்