பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதியின் தேமுதிக மக்கள் நலக் கூட்டணி த.மா.கா சார்பில் வேட்பாளராக தேமுதிக கி.ராஜேந்திரன் போட்டியிடுகிறார்.
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் வாக்கு சேகரித்த அவர் இன்று பெரம்பலூர் ஆலம்பாடி சமத்துவபுரம் மதரசா சாலை பழையபேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்கு சேகரித்தார்.
ஊழலற்ற ஆட்சி அமைக்கவும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அமைக்கவும் விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேற்ற பாடுபடுவேன் எனவும் வெளியூர் செல்வதற்கு வசதியாக புறவழிச்சாலையில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்க போராடுவேன் என்று வாக்குறுதி அளித்து கூட்டணிக் கட்சியினருடன் சென்று அதிக அளவு வாக்கு வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெற வைக்க வேண்டும் என வாக்காளர்களிடம் கோரினார்.
தேமுதிக பொருளாளார் சீனி.வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் வாசு.ரவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வீ.ஞானசேகரன் மதிமுக எஸ்.துரைராஜ் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர். இதே போன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் தனியாக சென்று வேன் மூலம் கூட்டணி கட்சியான தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தனர்.
சி.பி.எம்., மாவட்ட செயற்குழு என்.செல்லதுரை வட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன், எம்.கருணாநிதி, எ.கணேசன், பி.முத்துசாமி எ.அன்பழகன், பி.கிருஷ்ணசாமி, வாலிபர் சங்கம் எஸ்.பி.டி.ராஜாங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.