விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வுப் பரப்பியக்கம் இன்று பெரம்பலூர் புதியபேருந்து நிலையத்தில் துவங்கியது.
மதுவை ஒழிப்போம் மக்களை காப்போம் என்ற முழக்கங்களை முன்னிறுத்தி இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பெரியார் பிறந்த நாள் முதல் காந்தி பிறந்த நாள் வரை (செப்-17 – அக்-2) வரை நடத்துகின்றனர்.
மதுவிற்கு எதிராக கோஷமிட்ட அவர்கள் மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு துண்டறிக்கையும் பொதுமக்களுக்கு வழங்கினர். வரும் அக்டோபர் 2-ந்தேதி வரை இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்டம் முழுவதும் உள்ள 18 இடங்களில் நடத்த திட்ட மிட்டமிட்டுள்னர்.
இதில் மாவட்ட செயலாளர் தங்கதுரை, முன்னாள் மாவட்ட செயலாளர் வீர.செங்கோலன் மற்றும் ஒன்றிய செயலர்கள் பாஸ்கர், கிருஷ்ணகுமார், கவியரசன், மாவட்ட நிர்வாகிகள் சி. கதிர்வாணன், தமிழ்மாணிக்கம், வழக்குரைஞர்கள் ஸ்டாலின், சம்பத்குமார், பெ. லெனின், தங்க. சண்முகசுந்தரம் உட்பட கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.