பெரம்பலுார் : பெரம்பலுார் மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் பெரியார் விருது பெற்ற முன்னாள் எம்.பி.,எஸ்.சிவசுப்ரமணியனுக்கு பாராட்டு விழா துறைமங்கலம் ஜே.கே., திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் வரவேற்றார். முன்னாள் மாவட்ட செயலாளர் துரைசாமி, மாநில கொள்கை பரப்பு அணி துணை செயலாளர் பெருநற்கிள்ளி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், அணி நிர்வாகிகள் பெரியசாமி, வல்லபன் ஆகியோர் முன்னிலை வகி்ததனர்.
கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் ஆ.இராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் குன்னம் எம்.எல்.ஏ., சிவசங்கர், மாநில இளைஞரணி துணை செயலாளர் சுபாசந்திரசேகர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, நல்லதம்பி, மதியழகன் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னாள் எம்.பி.சிவசுப்ரமணியன் ஏற்புரை ஆற்றினார்.
கூட்டத்தில், வரும் 14ம் தேதி நமக்கு நாமே பயணமாக பெரம்பலுார் மாவட்டத்திற்கு வருகை தரும் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, பெரியார் விருது வழங்கிய கட்சியின் தலைமைக்கு பெரம்பலுார் மாவட்ட தி.மு.க., சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்வது, வாக்காளர் சேர்த்தல், நீக்கல், சரிபார்த்தல் பணியை கட்சியினர் திறம்பட செய்வது, ஒதியம் அருகே கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு கிடப்பில் உள்ள மருத்துவக் கல்லூரியை துவங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்த தலைமையின் பெற்று நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நகர செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.