பெரம்பலூர் பெருமத்தூர் ஊராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள துணை சுகாதார நிலையத்திற்கான பூமி பூஜை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி தலைமையில் நடைபெற்றது
பெரம்பலூர் மாவட்டம் : பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட பெருமத்தூர் ஊராட்சியில் துணை சுகாதாரம் அமைக்க பூமி பூஜை இன்று சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி தலைமையில் நடைபெற்றது.
பின்னர் அவர், இந்தப்பகுதி மக்களுக்கு இந்த துணை சுகாதார நிலையம் பெரிதும் பயனுள்ள வகையில் இருக்கும், என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் வேப்பூர் ஊராட்சிக் குழுத் தலைவர் கிருஷ்ணகுமார், வேப்பூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி, உள்ளிட்ட அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.