Parents should spend an hour each day with their children: AVPS Anniversary celebrations Chairman R. Ramkumar!
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியின் 5வது ஆண்டு விழா பள்ளிவளாகத்தில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் சிவகாமி அனைவரையும் வரவேற்றார். பள்ளியின் தாளாளர் டாக்டர் ஆ.ராம்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மைகுரு எஜிகேசன் கண்சல்டன்சி நிர்வாகி செந்தில்குமார் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். முன்னதாக பேசிய பள்ளியின் சேர்மன் ஆ.ராம்குமார், பெற்றோகள் ஒவ்வொருவரும் தினமும் ஏதாவது ஒரு வேளை நேரத்தில் தினமும் ஒரு மணி நேரம் செலவழிக்க வேண்டும். இதனால், மாணவர்களின் தரம் மேம்படும் என பேசினார். விழாவில் வகுப்பு வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் நல்லொழுக்கத்தில் சிறந்து விளங்கிய மாணவர்கள் மற்றும் தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை இல்லாமல் வருகைப்பதிவேடு செய்த மாணவர்கள் என தேர்வு செய்து பரிசுசுள் வழங்கப்பட்டது. பின்னர், பள்ளியின் ஐந்தாண்டு சாதனைகள் குறித்த அறிக்கை வாசிக்கப்பட்டது. தேசிய பண்பாட்டையும் கலாசாரத்தையும் விளக்கும் வகையிலான பள்ளி மாணவ மாணவிகளின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளும் விழிப்புணர்வு நாடகங்களும் நடைபெற்றது. பள்ளியின் துணைமுதல்வர் சாரதா செந்தில்குமார், ஆசிரியைகள் ஹேமா, சந்திரோதயம் பள்ளியின் செயலாளர் இரா.சிவக்குமார் பங்குதாரர்கள் சி.மோகனசுந்தரம் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .