பெரம்பலூர் : பெண் ஒருவர் பஸ்சில் தவற விட்ட பணம் மற்றும் செல்போனை ரோந்து போலீசார் கைப்பற்றி உரியவரிடம் ஒப்படைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் சுப்ரமணி மனைவி கொளஞ்சி(42), சம்சா வியாபாரியான இவர் தனது சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே
உள்ள வரகூர் கிராமத்தில் அவரது உறவினர் ஒருவர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று காலை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரியலூர் சென்ற தனியார் பஸ்சில் ஏறி சென்றார்.
குன்னத்தில் இறங்கிய கொளஞ்சி அவரது கையில் வைத்திருந்த மணி பர்ஸ் மற்றும் செல்போன் ஆகியவை தவற விட்டு விட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்,
மீண்டும் எப்படி ஊர் திரும்புவது என அழுதவரே, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரோந்து போலீசாரிடம் சென்று பணம் மற்றும் செல்போனை பஸ்சில் தவற விட்டதை தெரிவித்தார்.
இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட எஸ்.ஐ தர்மராஜ் தலைமையிலான ரோந்து போலீசார் சம்மந்தப்பட்ட தனியார் பஸ்சை அரியலூர் இரயில்வே கேட் அருகே
துரத்தி பிடித்தனர், பின்பு பேருந்தினுள் கொளஞ்சி தவறவிட்ட 1600 ரூபாய் பணம் மற்றும் 2 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை கைப்பற்றி குன்னத்திற்கு
விரைந்து வந்து கொளஞ்சியிடம் ஒப்படைத்தனர்.
பணம் மற்றும் செல்போனை துரிதமாக கைப்பற்றி, அதனை உரியவரிடம் ஒப்படைத்த போலீசாரை பொது மக்கள் பாராட்டினர்.