பெரம்பலுார் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் நேற்று நள்ளிரவில் புகுந்த ஐந்து பேர் கொண்ட மர்மக் கும்பல் ஒன்று இப்பகுதியை சேர்ந்த கிரேடு ஒன் போலீஸார்களான லட்சுமிநாராயணன் (வயது37), வீட்டில் இருந்த ஆறு பவுன் தங்க நகை, பாஸ்கர்,30, வீட்டில் இருந்த மூவாயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு பவுன் நகை, சவுந்தர்ராஜன்(30), வீட்டில் இருந்த 2,500 ரூபாய், ரமேஷ்(29), வீட்டில் இருந்த 2,000 ரூபாய் ரொக்கம், இரண்டு கிராம் தங்க காசு என மொத்தம் ஏழே கால் பவுன் தங்க நகை மற்றும் 7,500 ரூபாய் ரொக்கம் திருட்டு போனது. இது குறித்து பெரம்பலுார் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.