பெரம்பலூர்: பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் தனியார் பேருந்து, அரசு பேருந்து ஓட்டுநர்கள் கண்ணாடி உடைந்த தகராறில் 15 நிமிடங்களுக்கு மேலாக மற்ற வாகனங்கள் வெல்ல முடியாத வகையில் வாகனங்களை நிறுத்தி கொண்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
நேற்று காலை பெரம்பலூரில் இருந்து ஆத்தூருக்கு புறப்பட்ட தனியார் பேருந்து சாலையின் குறுக்கே நிறுத்திக் கொண்டு திருச்சியில் இருந்து வந்த பூக்களை கடைகாரர்களுக்கு கொடுத்துள்ளார். அந்த சமயம் அரியலூரில் இருந்து வேலூருக்கு சென்ற பேருந்து தனியார் பேருந்தை கடந்து சென்றுள்ளது.
அப்போது தனியார் பேருந்தை முந்தி நிறுத்த முய்னற போது அரசு பேருந்தின் கண்ணாடி உடைத்தாக கூறப்படுகிறது. இதில் அரசு பேருந்து மற்றும், தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்ற வாகனங்கள் செல்ல முடியாத படி இப்பகுதி போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்திக் கொண்டு வாக்குவாத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த தனியார் பேருந்து ஊழியர்கள் அடாவடியாக பேசியதால் பாடாலூரில் பொதுமக்கள் அடித்து உதைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் 15 நிமிடத்திற்கு மேல் போக்குவரத்திற்கு இடையூ ஏற்படுத்தி கொண்டிருப்பதை தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களைஅப்பறப்படுத்தினர்.