நாம் தமிழர் கட்சி மீதான தொடர் அடக்குமுறை: சட்டப்போராட்டத்தின் மூலம் எதிர்கொள்வோம் என அக்கட்சியின் சார்பில் அறிவிப்ப செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த கட்சயின் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் தமிழன் தொலைக்காட்சி நிறுவனரும் மாநில பொருள்ளருமான கலைக்கோட்டுதயம் தலைமையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர் அப்போது அவர்கள் கூறியதாவது.தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சினைகளுக்காக முதலில் ஒலிக்கும் குரலாகவும், மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக உயரும் முதல் கரமாகவும், போராட்டக் களத்தில் மக்களோடு துணைநிற்கும் முதல் ஆளாகவும் நாம் தமிழர் கட்சியினர் இருப்பதால் மத்திய, மாநில அரசுகளின் அறிவிக்கப்படாத அடக்குமுறை கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்துள்ளது. கடந்த 10-04-2018 அன்று சென்னை அண்ணாசாலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஐபிஎல் போட்டிகளைத் தமிழகத்தில் நடத்த வேண்டாம் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சி, காவிரி உரிமை மீட்புக் குழு, தமிழர் கலை, இலக்கியப் பண்பாட்டு பேரவை, விவசாயச் சங்கத்தினர் மற்றும் இதர சனநாயக அமைப்பினர் ஒன்று திரண்டு போராடினர். அப்போது போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாகச் சீமான், பெ.மணியரசன், பாரதிராஜா உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பேரணியில் பங்கேற்ற 780 பேர் கைது செய்யப்பட்டு எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத் திடலில் அடைத்துவைத்து நள்ளிரவு 01:30 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.இந்தப் போராட்டத்தின் விளைவாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் பெயர் இல்லாமல் 21 நாம் தமிழர் கட்சியினர் என்று குறிப்பிட்டும் கொலை முயற்சி (307) உள்ளிட்ட 8 பிரிவுகளில் 3 வழக்குகள் பதியப்பட்டது. மேலும் ஐபிஎல் போட்டியின் போது பார்வையாளராகச் சென்று மைதானத்திற்குள் காலணி வீசியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஐபிஎல் போட்டிகளைப் புறக்கணிக்குமாறு முழக்கங்கள் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்ததற்காக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மகேந்திரன், ஐயனார், பொன்னுவேல், வாகைவேந்தன், பிரபாகரன், ராஜ்குமார், பிரகாஷ், சுகுமார், ஆல்பர்ட், ஏகாம்பரம், மார்டின் ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதும் கொலைமுயற்சி உள்ளிட்ட கடுமையான சட்டங்களுக்குக் கீழ் வழக்குப்பதியப்பட்டது.மன்சூர்அலிகான், வீரபாண்டியன், சரவணன், ரூபன், ஆகாஷ், பாபுராசன், ரங்கசாமி, சீனிவாசன், அருண்கண்ணன், முரளி, பொன்குமார் ஆகிய 11 பேர் மீது பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தது போன்ற பொய் வழக்குகள் புனையப்பட்டு. 15 நாள் தடுப்புக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்களின் பிணை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வந்த பொழுது தமிழக அரசு வழக்கறிஞர் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துப் பிணை பெற முடியாமல் செய்தார். அது ஒரு திட்டமிட்ட செயலாக இருந்தது. இவ்வாறாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது தொடர்ச்சியாகப் பொய்வழக்குகள் போடப்பட்டு தொடர் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆயினும் அதிகாரத்தின் இந்த அடக்குமுறைகளை நாம் தமிழர் கட்சி சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்! தொடர்ச்சியாக மண்ணுக்கும் மக்களுக்கும் உண்மையாக இறுதிவரை உறுதியாகப் போராடுவோம்!என அவர்களை கூறினர்

 


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!