பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள நெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து மகன் பிரசாத் (26). இவர் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள கிணற்றின் மேல் பகுதியில் மது போதையில் அமர்ந்திருந்தபோது, எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்தார்.
இதுகுறித்து, அவரது தாய் யசோதா (45) அளித்த புகாரின்பேரில் கை.களத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.