மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது தெரிவித்துள்ள தகவல்:
வரும் 17.01.2016 மற்றும் 21.02.2016 ஆகிய தேதிகளில் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழைந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படவுள்ளது. அதற்கான முன்னேற்பாடுப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அஹமது தலைமையில் இன்று நடைபெற்றது.
இளம்பிள்ளை வாதநோயை ஒழிக்கவும், குழந்தைகளுக்கு வராமல் தடுக்கவும் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழைந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த முகாம்கள் 17.01.2016 மற்றும் 21.02.2016 ஆகிய தேதிகளில் காலை 7.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை நடத்தப்படவுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை, ஆரம்பசுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவ மனைகள், பேருந்து நிலையங்கள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 383 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த முகாம்களில் சுகாதாரப்பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் என மொத்தம் 1528 பேர் ஈடுபடவுள்ளனர்.
பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழைந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்து இருந்தாலும் இந்த முகாமிலும் அந்த குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கலாம்.
குழைந்தைகளுக்கு இளம்பிள்ளை வாத நோய் வராமல் தடுக்க நடத்தப்படும் இந்த முகாமினை பொதுமக்கள் முறையாக பயனபடுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.