பெரம்பலூர் : லப்பைக்குடிக்காட்டில் போலி ஆவனம் மூலம் வீட்டு மனை விற்பனைசெய்ய 25 லட்ச ரூபாய் முன்பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட 7 பேர் மீது பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சி பிலால் தெருவைச்சேர்ந்தவர் முகமதுஹாஜி மகன் அப்துல்ஹாஜி(60), இவர் பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசிடம் அளித்த புகார் மனு அளித்துள்ளார்.
அதில் தெரிவித்துள்ளதாவது :
லப்பைக்குடிக்காடு பேரூராட்சியை சேர்ந்த மும்தாஜ்பேகம், ஷாகுல்ஹமீது, தவுலத்பீவி, ரெசிதாபேகம், ஹரீனாபேகம், நூர்ஜகான் ஆகிய 7 பேரும் சேர்ந்து வாலிகண்டாபுரம் சார்பதிவாளர் பதிவு எல்லைக்குட்பட்ட பென்னக்கோணம் செல்லும் சாலையில் புல எண் 160ல் 11, 229ல் 24லில் உள்ள 6 சென்ட் நிலத்தை 25 லட்சத்து 50 ஆயிரம் ருபாய் கிரையம் பேசி முன் பணம் வாங்கி கொண்டு, சம்மந்தப்பட்ட இடத்தை எனக்கு எழுதி தராமல் பென்னக்கோணம் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன், ஆறுமுகம், திருமாந்துறையை சேர்ந்த வெங்கடேசன், இடைச்செருவாய் கிராமத்தை சேர்ந்த குமார் ஆகிய நான்கு பேருக்கும் விற்பனை செய்து விட்டனர்.
இதனையடுத்து முன்பணம் கொடுத்த நான் பெரம்பலூர் மாவட்ட எஸ்.பியிடம் கடந்த 07.12.15ந்தேதி புகார் அளித்தேன். அதன் பேரில் நடைபெற்ற விசாரணையின் போது கடந்த 07.03.16ந்தேதி மேற்படி நபர்கள் 7 பேரும் பணத்தை திரும்ப அளிப்பதாக எழுத்து பூர்வமாக வாக்குறுதி அளித்திருந்தனர்.
இந்நிலையில் லப்பைக்குடிக்காடு பேரூராட்சியை சேர்ந்த அபுபக்கர் என்பவரிடம் சம்மந்தப்பட்ட இடத்தை விற்று விட்டனர். ஆனால் அவர்கள் கேட்ட கால அவகாசத்திற்கு பின்னரும் எனக்கு பணம் கிடைக்கப்பெறவில்லை.
இடம் விற்பனையானது குறித்து தகவலறிந்த அப்துல்ஹாஜி அவர்களிடம் சென்று பணம் கேட்டதற்கு தகாத வார்த்தையில் பேசி தாக்க முயற்சித்து, கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே மேற்கண்ட நபர்களிடமிருந்து எனக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதோடு, நம்பிக்கை மோசடி செய்த பணம் 25 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பெற்றுத்தர வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அந்த புகார் மனுவின் அடிப்படையில் செய்து போலி ஆவனங்கள் மூலம் மோசடியில் ஈடுபட்ட மும்தாஜ்பேகம், ஷாகுல்ஹமீது, தவுலத்பீவி,ரெசிதாபேகம், ஹரீனாபேகம், நூர்ஜகான் ஆகிய 7 பேர் மீதும் இன்ஸ்பெக்டர் லெட்சுமிலதா வழக்கு பதிந்து அவர்களை தேடி வருகிறார்.