பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் கதிரவன்,41, இவரது மனைவி ஜெயக்கொடி,36, என்பவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் போனது.
இதையறிந்த நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் செல்வம் (55), என்பவர் கதிரவனை நேரில் சந்தித்து தான் அரசு டாக்டர் என்றுக்கூறி சிகிச்சை அளித்துள்ளார். ஆனால் ஜெயக்கொடிக்கு உடல் உபாதைகள் அதிகமானதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து செல்வம் தலைமறைவானார்.
இந்நிலையில் நேற்று காலை 8 மணியளவில் கதிரவன் சிறுவாச்சூர் கடைவீதி பகுதியில் நின்றுக்கொண்டிருந்தபோது அங்கு போலி டாக்டரான செல்வம் மருத்துவ உபகரணங்களுடன் நிற்பதை பார்த்துள்ளார்.
இதனையடுத்து செல்வத்தை வளைத்துப்பிடித்து கதிரவன் பெரம்பலூர் போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து கதிரவன் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் எஸ்.எஸ்.ஐ., குமார் வழக்கு பதிந்து செல்வத்தை கைது செய்து பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்