நாளை முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக தலைகவசம் (ஹெல்மெட்) அணிய வேண்டும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் இன்று ஒருநாள் மட்டுமே உள்ளதால் பொதுமக்கள் ஹெல்மெட் வாங்க கடைகளில் மொய்த்து உள்ளனர்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி பல கடைகளில் ஹெல்மெட் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. கம்பெனி விலையை விட பல இடங்களில் டபுள் (இரண்டு மடங்கு) விலைக்கு இன்று ஹெல்மெட் விற்பனை செய்வதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
இப்படி இஷ்டத்துக்கு அதிக விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் அனைத்து கடைகளிலும் தரமான ஹெல்மெட்டைதான் விற்பனை செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் ஆவேசமாக கூறினர்.
அதேசமயம் அவர்கள் ஹெல்மெட் விற்கப்படும் கடைகளுக்கும் சென்று சோதனை நடத்த வேண்டும். அதிக விலைக்கு ஹெல்மெட் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கூறினர்.
இன்று இரவு வரை ஹெல்மெட் அணியாமல் போகலாம். விடிந்தால் அதாவது நாளை (புதன்கிழமை) முதல் ஹெல்மெட் கட்டாயம் ஆகிறது. ஏற்கனவே இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் ஹெல்மெட் வாங்கி விட்டார்கள்.
50 ரூபாய்க்கும் 100 ரூபாய்க்கும் என பெட்ரோல் போட்டவர்கள் கூட… போலீசிடம் மாட்டி ஏன் தெண்டம் கட்டணும்…? என்று கஞ்சத்தனம் பார்க்காமல் 800 ரூபாய்க்கும் 900 ரூபாய்க்கும் என ஐ.எஸ்.ஐ. முத்திரையிட்ட தரமான ஹெல்மெட்டை வாங்கி விட்டார்கள்.
இன்னும் வாங்காதவர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் கடைகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையே கோர்ட்டு உத்தரவுபடி நாளை முதல் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிந்து ஓட்டுகிறார்களா…? என சோதனை செய்ய போலீசாரும் களத்தில் குதிக்க தயாராகி விட்டார்கள்.
ஆம்… நாளை போலீசாரின் கவுண்டன் ஆரம்பமாகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் உஷார்… உஷார்!!