மகளிருக்காக அம்மா கராத்தே பள்ளி தொடங்க வேண்டும்-முன்னாள் காவல் அதிகாரி தனசேகரன் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக காவல்துறையில் ஆயுதபடை தலைமை காவலராக, சிறப்பு உதவி ஆய்வாளராக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கருப்பு பூனை படை அமதிகாரிகளில் ஒருவராக,மற்றும் பல முக்கிய அசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் கடந்த 30 ஆண்டுகளாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் தனசேகரன் . இவர் தற்காப்பு கலைகளான கராத்தே,களரி, தாய்ச்சி , ஜிம்னாஸ்டிக் என பல்வேறு கலைகளை கற்று ஜப்பான், மலேசியா,தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சென்று பதக்கங்களையும் வென்றுவந்தவர் ஆவார். அனைத்து போட்டிகளிலும் தமது சொந்த செலவில் பங்கேற்று தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்தவர் தனசேகரன். அவர் ஜப்பானில் சென்று பதக்கம் வென்று வந்த போது அதனை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் சமர்பிக்க முயன்றபோது அதற்கு தமக்கு அனுமதி கிடைக்கவில்லைஎன சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார். தமது பணி ஓய்வுக்கு பின்னர் சைதாப்பேட்டையில் அம்மா கராத்தே பள்ளி ஒன்றை தொடங்கி ஏழை எளிய குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார். தற்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தம்முடைய கடந்தகால சாதனைகளுக்கு அங்கீகராம் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தினார். மேலும் மகளிரின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாகவும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றும் வண்ணமாகவும் தமிழகம் முழுதும் அம்மா கராத்தே பள்ளிகளை தொடங்கி மாணவிகளுக்கு இலவச பயிற்சி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக காவல்துறையில பணியாற்றி மாநில அரசுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்த இந்த காவல அதிகாரியின் கோரிக்கை தமிழக அரசால் வெகு விரைவில் நிறைவேற்றப்படும் என்பதே அனைவரின் எதிர்பாரப்பு –

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!