பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்கிட ரூ. 36.00 கோடி இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இலக்கினை எய்திடும் பொருட்டு பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள், பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர், பூலாம்பாடி, அரும்பாவூர் மற்றும் இலப்பைக்குடிக்காடு ஆகிய பேரூராட்சிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்களது வங்கி சேமிப்பு, மற்றும் கடன் புத்தகம் போன்ற அனைத்து பதிவேடுகளுடன் 07.08.2015 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறவுள்ள தரம் பிரித்தல் (வங்கி கடன் இணைப்பு) சிறப்பு முகாமில் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு உதவி திட்ட அலுவலர்களை 9445034169, 9445034170 என்ற எண்ணில் தொடர் பு கொள்ளலாம்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!