பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க சித்தர் மகா குரு பூஜை 34 வது வருட விழா நடைபெற்றது.
இப்பூஜையை முன்னிட்டு மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில் பிரம்ம ரிஷி மலை அன்னை சித்தர் ராஜ்குமார் குருஜி சீடர், சிங்கப்பூர் வழக்கறிஞர் ரத்தினவேல் செரின் தம்பதியினர் சாதுக்களுக்கு வஸ்திர தானம், அன்னதானம் வழங்கினர்.
இப்பூஜையை ஸ்ரீலஸ்ரீ தலையாட்டி சித்தர் ஆஸ்ரமம் காமராஜ் சுவாமிகள், மற்றும் சித்திரின் சீடர்கள் விழா ஏற்பாடு செய்து இருந்தனர்.
இப்பூஜையில் நூற்றுக்கணக்கான சாதுக்களும், பொதுமக்களும், கலந்து கொண்டனர்.
உலக மக்கள் நலன் வேண்டியும், மழைவேண்டியும், பிராத்தனை செய்தனர்.
இவ்விழாவில் ஸ்ரீசுந்தரமகாலிங்கம் சுவாமி, ஸ்ரீதவசிநாதன் சுவாமி, ஸ்ரீதயாளன் சுவாமி, புதுச்சேரி வேலாயுதம் சித்தர் கலந்து கொண்டனர்.
இப்பூஜையை கொல்லி மலை சித்தர் ஸ்ரீலஸ்ரீபாபு சுவாமிகள் 210 சித்தர்கள் வேள்வி பூஜை நடத்தினார்.