பெரம்பலூர்: வருகின்ற நவ.17ம் தேதி, மக்களுகாக மக்கள் பணி திட்டதிற்க்கு பெரம்பலூர் வருகை தரும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் வருகை குறித்து மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக, மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் துரை.காமராஜ் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடை பெற்றது .
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வருகை குறித்து மக்களுகாக மக்கள் பணி கூட்டத்தை எவ்வாறு நடத்துவது, தொண்டர்கள் மகளிர் அணிகளை அழைத்து வருவது மற்றும் நலத்திட்டங்கள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது .
மற்றும் பொதுக்கூட்டத்தின் அழைப்பிதழ் நிர்வாகிகளுக்கு முதல்கட்டமாக வழங்கபட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் கணபதி, மாவட்ட பொருளாளர் சீனி.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் கண்ணுசாமி, சிவகுமார் , கங்காதரன், சுடர்செல்வன், ஒன்றிய செயலாளர் பெரம்பலூர் வாசுரவி, வேப்பூர் மலர்மன்னன், வேப்பந்தட்டை துரை.சிவாஐயப்பன், ஆலத்தூர் பொன்சமிதுரை, செயற்குழு உறுப்பினர் செல்லப்பிள்ளை, ரெங்காராஜ், பொதுகுழு உறுப்பினர் மனோகரன், விஜயகுமார், கேப்டன் மன்ற செயலாளர் தவசிஅன்பழகன், மாவட்ட இளைஞராணி செயலாளர்கள் இளையராஜா, சஞ்சீவிக்குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் வைரமணி, கோமதி, மாவட்ட மாணவரணி செயலாளர் முத்தமிழ்செல்வன், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் ,கிளை கழக, மகளிரணி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.