பெரம்பலூர்: அதிமுக நகர கழகத்தின் சார்பில் அதிமுகவின் 44-வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம், பெரம்பலூர் மேற்கு வானொலித் திடலில் நகர அவைத் தலைவர் சி.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. 11வது வார்டு கு.யாயாதி வரவேற்றார்.
ஒன்றிய செயலாளர்கள் (வேப்பந்தட்டை) என்.சிவப்பிரகாசம், (செந்துறை) ஆர்.சுரேஷ், பேரூராட்சி செயலாளர் (அரும்பாவூர்) ரெங்கராஜ், (குரும்பலூர்) வி.செல்வராஜ், பூலாம்பாடி வி.வினோத், பெரம்பலூர் நகர துணைச் செயலாளர்கள் எழிலரசி ராவணன், நீலாசேகர், நகர பொருளாளர் டி.ஜெகதீஸ்வரன், மாவட்ட பிரதிநிதி கே.சேகர், நகர இளைஞரணி செயலாளர் கே.சிவக்குமார், வார்டு நகர் மன்ற உறுப்பினர், பி.லோகநாதன், பால்ராஜ், தமிழ்ச்செல்வி, பழனிசாமி, சிங்.சுரேஷ், பேபி காமராஜ், வீட்டுவசதி கூட்டுறவு சங்க தலைவர் முகமது இக்பால், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சின்னராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சர் ஆனந்தன், தலைமை கழகப் பேச்சாளார் எரியீட்டி சேகர், மாவட்ட செயலாளரும், நகர்மன்றத் துணைத் தலைவருமான ஆர்.டி.இராமச்சந்திரன், மாவட்ட மாணவரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தமிழ்ச்செல்வன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற பொருளாளர் வரகூர்.அ.அருணாசலம், ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.
மாவட்டத் அவைத் தலைவர் இரா.துரை, மாவட்ட இணைச் செயலாளர் எம்.ராணி, மாவட்ட துணைச் செயலாளர் கவுரிஜெயராமன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.என்.இராஜாராம், மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ்.முத்தமிழ்செல்வன், மாவட்ட மகளிரணி செயலாளர் க.ராஜேஸ்வரி, ஒன்றியக் குழுத் தலைவர்கள் (வேப்பூர்) என்.கிருஷ்ணகுமார், (செந்துறை) செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் குணசேகரன், மற்றும் பெரம்பலூர் நகர வார்டு செயலாளர்கள் ஆர்.கனகராஜ், பெருமாள், பாபு, துரை.கலியமூர்த்தி, சக்திவேல், ப.ரத்தினம், சி.பிரபு, குமார், வி.சிதம்பரம், திருஞானம், பூவேந்திரன், அர்ஜுனன், பி.கலியன், பாஸ்கர், என்.கர்ணன், நாகராஜ், ஜெயராமன், ஆர்.செல்வராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட செயலாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் பேசியதாவது:
அ.இ.அ.தி.மு.க கட்சி மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி, உழைக்கும் மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. அரசியலில் இருப்பவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும், மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு அறிஞர் அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்டதுதான் தி.முக.
அந்த கட்சி ஆட்சி பீடத்தில் அமர பாடுபட்டவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் உழைப்பினால் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது தி.மு.க., அண்ணாவின் மறைவிற்கு பிறகு அந்த கட்சியை குறுக்கு வழியில் கைப்பற்றியவர் தான் கருணாநிதி. அந்த கருணாநிதி தி.மு.க,வின் தலைமை பொறுப்பை ஏற்றவுடன், அன்றும் அதை ஏற்றுக் கொண்டு கட்சியின் பாடுபட்டு உழைத்தவர்தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
வீடுவீடாக, கிராம புறங்கள் தோறும் சென்று உதயசூரியன் சின்னத்திற்காக சென்று வாக்கு கேட்டு திராவிட முன்னேற்ற கழகத்தை வெற்றி பெறச் செய்து கருணாநிதியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியவர்தான் புரட்சித்தலைவர்.எம்.ஜி.ஆர் அவர்கள், அப்போதே கருணாநதியை பற்றி புரட்சித் தலைவருக்கு நன்றாக தெரியும், கருணாநதி என்பவர் சுத்தமற்றவர், மக்களுக்காக பாடுபட அரசியலில் இல்லாதவர்என்பதை உணர்ந்தவர்.
திருக்கழுகுன்றம் பொதுக்கூட்டத்தில் மக்களுக்காக மக்கள் ஆதரவு பெற்று ஆட்சிக்கட்டிலில் உள்ள திமுக வினர் தனது சொத்துக்கணக்கை பொதுமக்களிடம் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, பதவி ஏற்புக்கு முன்பும், பதவி ஏற்ற இடைப்பட்ட காலத்திலும்,, பதவியை விட்டு விலகிய பிறகும் சொத்துக்கணக்குகளை பகிரங்கமாக அறிக்கவேண்டும் என கோரினார். அதில் முதலமைச்சர், அமைச்சர், உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் இதே போன்று பகிரங்கமாக அறிவிக்க வெண்டும் எனத் தெரிவித்தார்.
இந்தக் கட்சியில் ஆட்சியில் இருப்பவர்கள் எந்த ஊழலும் செய்யக்கூடாது, தவறான முறையில் சொத்து சேர்க்க கூடாது. மக்களை சுரண்டி பிழைக்க கூடாது, என்ற எண்ணத்தில் தெரிவித்தார். அப்போது ஆட்சியில் கருணாநதி நல்ல எண்ணம் கொண்டவராக இருந்தால் இந்த கருத்தை வரவேற்று இருக்க வேண்டும். ஆனால், மாறாக கருணாநிதி அன்று முதல் இன்று வரை குடும்பத்திற்காக உழைப்பவர். ஏதோ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தவறு செய்து விட்டதை போல சித்தரித்து கட்சியில் இருந்து எம்.ஜி.ஆரை நீக்க கருணாநிதி தீர்மானம் நிறைவேற்றினார்.
இதயக்கனியை வண்டு துளைத்தது
அறிஞர் அண்ணா அவர்கள் ஓர் மேடையில் பேசும் போது நான் மரத்தின் கீழ் அமர்ந்து இருந்தேன். அப்போது அந்த மரத்தில் ஒரு கனி பழுத்து தொங்கி கொண்டிருந்தது. அது என்மடியில் வந்து விழுந்தது. அதை நான் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன். அதுதான் இதயக்கனி, எம்.ஜி.ஆர் என அறிவித்தார். ஆனால், அண்ணா உயிரோடு இருக்கும் எம்.ஜி.ஆர் எவ்வளவு முக்கியத்துவம் அளித்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளலாம். ஆனால், கருணாநதி அண்ணா மறைந்த உடன், அண்ணாவின் பேச்சை இழிவுபடுத்தும் விதமாக : அண்ணாவிடம் உயிரோடு இருக்கும் போது இதயத்தை கேட்டேன், இதயத்தை கொடுத்தார். ஆனால் இதயத்தினுள் இருந்த இதயக்கனி வண்டு துளைத்து விட்டது தூக்கி எறிந்து விட்டேன் என பேசினார். ஆனால், அன்றே கருணாநிதிக்கு நாக்கு சனி பிடித்தது … மக்களும் அன்றிலிருந்தே தூக்கி எறிய துவங்கினர்.
அதன் பிறகு அ.இ.அ.தி.மு.க உருவானது. இந்தக் கட்சி ஆரம்பிக்கும் போதே ஊழலற்ற ஆட்சியை நடத்த வேண்டும், மக்கள் வரிப் பணத்தை கொள்ளையடிப்பவர்களிடமிருந்து இந்த அரசியல் காப்பாற்றப் பட வேண்டும், ஊழலுக்கு எதிர்ப்பாக கருணாநிதியிடமிருந்து தமிழகத்தை காப்பற்றுவதற்காகவே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்ட்ட கட்சிதான் அ.இ.அ.தி.முக. அது அன்று 43 ஆண்டுகள் கடந்து இன்று 44 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
எங்களது அம்மா மக்களுக்காவே வாழுகிறார். ஆனால் கருணாநதி யாருக்காக வாழுகிறார்., அவருடைய பெரிய குடும்பத்திற்காக வாழுகிறார். எதற்காக ஊழல் செய்ய வேண்டும் யாருக்காக ஊழல் செய்ய வேண்டும்.
மக்களின் வரிப் பணத்தை கருணாநிதி குடும்பம்…. கொள்ளையடிக்க விடாமல் தடுத்து கொண்டிருப்பவர் நமது அம்மா.. திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் ஏறி வந்த கருணாநிதிக்கு எப்படி இவ்வளவ சொத்து வந்தது. மாறன் குடும்பத்தினர் சொத்து எவ்வளவு அறிவிக்க முடியுமா!
ஜனநாயகம் எங்கே!
திமுகவில் ஜனநாயகம் இருக்கிறதா! அம்மாவை போல் கடை கோடி தொண்டன் ஓ.பன்னீர் செல்வத்தை போன்று கருணாநதி ஒருவரை முதலமைச்சராக்கி அழகு பார்க்க முடியுமா, முடியாது. அண்ணா மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சியை தனது குடும்பக் கட்சியாக மாற்றிது கருணாநிதிதான் . மக்களுக்காக கட்சி நடத்துகிறார் அம்மா, குடும்பத்திற்காக கட்சி நடத்துகிறார் கருணாநிதி, தனது மகனை முதல்வராக்கி அழகு பார்க்க ஆசை படுகிறார்.
இதே போலத்தான் ராமதாசும் தனத மகன் அன்புமணி முதல்வராக்க ஆசைப்படுகிறார். விஜயகாந்தும் அப்படித்தான், தனது மனைவி, மச்சானன் சுதீசை உடன் அழைத்துக் கொண்டு செல்வதோடு மட்டுமில்லாமல் பதவியெல்லாம் வேறு எவருக்கும் போய்விடக்கூடாது என்ற ஆசையில் குடும்பக் கட்சிகள் நடத்துகின்றனர். இதே ஐ.ஜே.க. பச்சமுத்து தனது மகனை இளைய வேந்தர் என பட்டம் சூட்டி முதவராக்க அலைகிறார்கள்
வாரிசுகளை கட்சிக்கு கொண்டுவராமல் மக்களுக்காக இருக்கும் ஒரே கட்சி புரட்சித் தலைவரால் துவக்கப்பட்டு அம்மா தலைமையில் வழி நடக்கும் அதிமுக ஒன்றே! மக்களுக்கான கட்சி என பேசினார்.
2வது வார்டு செயலாளர் எஸ்.பாலமுருகன் நன்றி கூறினார்.