கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடந்த திருச்சி மண்டல அளவிலான செஸ்போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கி பாராட்டு
பெரம்பலூர் : திருச்சி, காரைக்குடி, திருவாரூர், திண்டுக்கல், பெரம்பலூர் ஆகிய பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியை சேர்ந்த 53 மாணவ,மாணவிகள் கலந்து கொண்ட சதுரங்க விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் 14,17,19 வயது முறையே மாணவ,மாணவிகளுக்கும் தனித்தனியாக போட்டி நடைபெற்றது. போட்டியின் நடுவர்களாக அரசால் அங்கீரிக்கப்பட்ட செஸ் அகடமியை சேர்ந்த அயிரவரதம், ஷியாம்சுந்தர், விஜயராமன் ஆகியோர் பணியாற்றினர்.
இதில் ஆண்கள் பிரிவு 14 வயதுக்குட்பட்டோர் போட்டியில் காரைக்குடி பள்ளி மாணவர்கள் செந்தமிழ்குமரன் முதலிடத்தையும், யுவராஜ் இரண்டாமிடத்தையும், தருன் தர்ஷன் மூன்றாமிடத்தையும், 17 வயதுக்குட்பட்டோர் போட்டியில் காரைக்குடி பள்ளி மாணவர்கள் அருணாச்சாலம் முதலிடத்தையும், ரூபேஸ்தருன் இரண்டாமிடத்தையும், திண்டுக்கல் பள்ளி மாணவர் சிபிகார்த்திகேயன் மூன்றாமிடத்தையும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் திருச்சி பள்ளி மாணவர் குமரன் முதலிடத்தையும், திண்டுக்கல் பள்ளி மாணவர் ஹரிநாராயணன் இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.
இதேபோல் பெண்கள் பிரிவில் 14 வயதுக்குட்பட்டோர் போட்டியில் காரைக்குடி பள்ளி மாணவி ஸ்ரீனி முதலிடத்தையும், கவ்யா இரண்டாமிடத்தையும், கிருத்திகா மூன்றாமிடத்தையும், 17 வயதுக்குட்பட்டோர் போட்டியில் திண்டுக்கல் பள்ளி மாணவி ஹரிணி முதலிடத்தையும், பெரம்பலூர் பள்ளி மாணவிகள் ஹர்சினி இண்டாமிடத்தையும், ஹரிணி மூன்றாமிடத்தையும், 19 வயதுக்குட்பட்டோர் போட்டியில் திண்டுக்கல் மாணவி கார்த்திகாதேவி முதலிடத்தையும், நிவேதிதா இரண்டாமிடத்தையும், கோகிலா மூன்றாமிடத்தையும் பிடித்தனர். மேலும் ஒவ்வொரு பிரிவிலும் 4 மற்றும் 5இடத்தை பிடித்தவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அஹமது தலைமை வகித்து போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இப்போட்டியில் முதல் மூன்று இடங்களை வென்றவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்ள தகுதிபெறுவர். நிகழ்ச்சியில் கேந்திரிய வித்யாலயா கமிட்டி உறுப்பினர் குமணன், பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் விஜயகுமார், பள்ளி முதல்வர் ரெங்கசாமி, ஹிந்தி ஆசிரியர் மேகநாத்ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.