மண்ணின் வளம் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முக்கியமானதாகும். பயிரின் மகசூல் மண்ணின் வளத்தையும், அதிலிருந்து கிடைக்கக்கூடிய ஊட்டசத்தினையும் பொருத்தே அமையும்.
அளவுக்கு அதிகமான இரசாயன உரத்தை பயன்படுத்துவதாலும் ஒரே சத்தை தொடர்ந்து பயன்படுத்துவதாலும் மண்ணின் வளம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது.
எனவே, மண்ணின் வளத்தை அறிய மண்மாதிரி ஆய்வு செய்வது முக்கியமாகும்.
மண்ணில் உள்ள தழை, மணி, சாம்பல் சத்துகளின் அளவை அறியவும், களர், அமில, உவர் தன்மைகளை அறிந்து தக்க சீர்திருத்தம் செய்யவும், தேவைக்கேற்ப உரமிட்டு உர செலவை குறைக்கவும், அங்கக சத்தின் அளவு அறிந்து நிலத்தின் நிலையான வளத்தை பெருக்கிடவும் மண் ஆய்வு செய்ய வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு குறைந்தது 10 இடங்களில் மண்மாதிரி எடுக்கப்பட வேண்டும். ஆங்கில எழுத்து ‘ஏ” வடிவில் குழியை குறிப்பிட்ட ஆழத்தில் வெட்டி குழியின் இருபக்கங்களிலும் மேலிருந்து கீழ்வரை ஒரே சீராக அரை அங்குல ஆழத்தில் மண்ணை வெட்டி எடுக்க வேண்டும்.
நெல், கடலை, கம்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கு 15செ.மீ ஆழத்திலும் பருத்தி, கரும்பு, வாழை, மிளகாய், மரவள்ளி போன்ற பயிர்களுக்கு 22.5செ.மீ ஆழத்திலும், தென்னை, மா மற்றும் பழத்தோட்ட பயிர்களுக்கு 30, 60, 80செ.மீ ஆழத்தில் மூன்று மண் மாதிரிகளும் எடுக்கப்பட வேண்டும்.
வயலில் ஒரு இடத்தில் 1ஃ2கிலோ வீதம் 10 இடங்களில் 5 கிலோ மண்மாதிரிகள் சேகரிக்கப்பட வேண்டும். சேகரிக்கப்பட்ட மண்ணை சீராக பரப்பி நான்கு சமபாகங்களாக பிரிக்கவும். பின்னர் எதிர் எதிர் மூலையில் இருபாகங்களிலும் உள்ள மண்ணை நீக்கி விடவும்.
மீண்டும் மண்ணை பரப்பி முன்பு செய்தது போல் நான்கு சம பாகங்களாக பிரித்து வேறு எதிர் எதிர் மூலையில் உள்ள மண்ணை நீக்கி விடவும்.
இப்படி பகுத்து பிரித்து சுமார் 1ஃ2கிலோ மண்ணை பாலித்தீன் பை அல்லது துணிப்பையில் கட்டி விபரத்தாள் இணைத்து ஆய்வுக்கு கொடுக்கப்பட வேண்டும்.
விபரத்தாளில் விவசாயின் பெயர், சர்வே எண், பயிரிடபோகும் பயிர், பயிரிபட்ட பயிர் விபரம் குறிக்கப்பட வேண்டும்.
எரு குவித்த இடங்கள், வரப்பு ஓரங்கள், மரநிழல், வாமடை பகுதி மற்றும் நீர் கசிவு உள்ள இடங்களில் மண்மாதிரி எடுக்க கூடாது.
வயலில் பயிர் இல்லாதபோது அதாவது தரிசாக இருக்கும் போது மண்மாதிரி எடுக்க வேண்டும். அதற்கு இதுவே தக்க தருணமாகும்.
எனவே, மண்மாதிரி எடுக்க கூடாத இடங்களை தவிர்த்து, வயலின் நடுவில் அனைத்து இடங்களிலும் ஏக்கருக்கு 10 எண்கள் வீதம் மண்மாதிரி சேகரிக்கப்பட வேண்டும்.
தழை, மணி, சாம்பல் சத்துக்கள் பற்றி அறிய ரூ.10ஃ- மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் பற்றி அறிய ரூ10ஃ-ஆக கூடுதல் ரூ.20ஃ- -ஐ மண்மாதிரி ஆய்வு கட்டணமாக செலுத்த வேண்டும்.
அதேபோல் பாசன நீர் மாதிரி ஆய்வு செய்ய கிணற்றில் பம்ப்செட் பொருத்தபட்டிருந்தால் அரைமணி நேரம் மோட்டாரை ஓட வைத்து பின்பு வரும் தண்ணீரில் நீர் மாதிரி சேகரிக்க வேண்டும்.
மாதிரி சேகரிக்கும் பாட்டில் சுத்தமாகவும், காற்று குமிழ்கள் இல்லாமலும் இருக்க வேண்டும். ஒரு லிட்டா; அளவிற்கு பாசன நீர் மாதிரி சேகரித்து உடனே ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்.
பாசன நீர் மாதிரி ஆய்வு செய்வதற்கு நீர் மாதிரி ஒன்றுக்கு ரூ.20ஃ- வீதம் ஆய்வு கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
பெரம்பலூர் வட்டாரத்தில், நடமாடும் மண் ஆய்வுக் கூடம் மண்மாதிரிகள் ஆய்வு மேற்கொள்ள 2.06.2015 அன்று ஈச்சங்காடு மற்றும் நாரணமங்கலம்,
3.06.2015 அன்று இரூர் மற்றும் பாடாலூர், 4.06.2015 அன்று நாட்டார்மங்கலம் மற்றும் செட்டிகுளம், 05.06.2015 அன்று மாவிலங்கை மற்றும் கண்ணப்பாடி,
06.06.2015 அன்று புதுஅம்மாபாளையம் மற்றும் டி.களத்தூர் பகுதிகளுக்கும் வருகை தந்து மண் மற்றும் நீர் மாதிரிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
அதுசமயம் அனைத்து விவசாயிகளும் மேற்குறிப்பிட்டுள்ளவாறு தங்களது வயலில் மண் மாதிரிகள் சேகரித்து வந்து கட்டணமாக ரூ.20ஃ-(ரூபாய் இருபது மட்டும்) செலுத்தி மண் ஆய்வு செய்து,
அதன்படி உரங்கள் அளவோடு இட்டு சாகுபடி மேற்கொண்டு அதிக இலாபம் பெற்று பயனடைய வேண்டும் என வேளாண் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.