பெரம்பலூர்: பெரம்பலூரில் மதிமுக கட்சியின் மறுமலர்ச்சி மாணவர் மன்றத்தின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாநில அமைப்பாளர் சசிகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் துரைராஜ், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில மகளிரணி செயலாளர் ரொகையா, மாநில மாணவரணி துணைச் செயலாளர் ஆசைத்தம்பி உட்பட பலர் பேசினர். மாநில மாணவர் அணி செயலாளர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் மாநிலம் முழுவதும் அனைத்து வகைகல்லூரிகளில் பயிலும் ஒரு லட்ச மாணவர்களை உறுப்பினர்களாக சேர்ப்பது, கல்லூரிகளில் மறுமலர்ச்சி மாணவர் மன்ற கிளை ஏற்படுத்துதல், தமிழகத்தில் புதிய ஆட்சியை நிர்மாணிக்க உறுதி பூண்டு மறுமலர்ச்சி பயணம் மேற்கொண்டுள்ள வைகோவின் லட்சியம் பயணம் வெற்றிப்பெறதுணை நிற்ப்பது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட அவைத்தலைவர் செல்ல.கதிர்வேல், மாவட்டபொருளாளர் ஜெயசீலன், தலைமைசெயற்குழுஉறுப்பினர் சுப்ரமணி, மாவட்ட துணை செயலாளர்கள் பேரளிசரவணன், ரபியூதின், மாணவரணி மாவட்ட நிர்வாகிகள் மணிவண்ணன், பிரபாகரன், ராஜேந்திரன் மற்றும் அனைத்து மாவட்ட மாணவரணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பெரம்பலூர் மாவட்ட அமைப்பாளர் சைமன்ராஜ் வரவேற்றார். முடிவில் துணை அமைப்பாளர் தமிழருவன் நன்றி கூறினார்.